கோடை கால நோய்களை கண்காணிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை கண்காணிக்கக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழகக்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் வரும்…

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை கண்காணிக்கக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழகக்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் வரும் காலங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தில் சுகாதார வசதிகளை மாநிலங்கள் திறம்பட தயார்படுத்தவேண்டும். இதற்கான வழிகாட்டுதல் நடைமுறைகளை சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ”வெப்பம் தொடர்பான நோய்களுக்கான தேசிய செயல் திட்டம்” என்ற பிரிவின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சுகாதாரத் துறைகள், மருத்துவ அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் வெப்பம் சார்ந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டமும் வெப்பம் சார்ந்த நோய்களை தடுப்பதற்கு அல்லது சிகிச்சை மேற்கொள்வதற்கு கிராம அளவில் சுகாதார பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

அண்மைச் செய்தி :  சசி தரூர் பங்கேற்ற நிகழ்ச்சி – ஆக்ஸ்போர்டு அகராதியை எடுத்துச் சென்ற பார்வையாளர்

ஒவ்வொரு நாளும் வெப்பநிலை குறித்த விவரங்கள் மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ளப்படும். இதன் மூலம் வெப்ப அலைகள் குறித்த விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளமுடியும். இதை மாவட்ட அளவில் பகிர்ந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனுப்பிய கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.