“அமித்ஷா சொன்னதில் பாதி உண்மை…பாதி பொய்” – நியூஸ் 7 தமிழுக்கு பழ.கருப்பையா பிரத்யேக பேட்டி..!

“அமித்ஷா சொன்னதில் பாதி உண்மை பாதி பொய் உள்ளது” என பழ.கருப்பையா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை இழந்துள்ளோம். அதற்கு காரணம் திமுகதான் என்று…

“அமித்ஷா சொன்னதில் பாதி உண்மை பாதி பொய் உள்ளது” என பழ.கருப்பையா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இரண்டு முறை இழந்துள்ளோம். அதற்கு காரணம் திமுகதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ. கருப்பையாநியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..

”அமித்ஷா சொன்னதில் ஒரு பாதி உண்மை ஒரு பாதி பொய். நேருவுக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்த போது அனைவரும் சொன்னது காமராஜரைதான். பிரதமராக வேண்டும் என்று காமராஜர் நினைத்திருந்தால் வந்து இருக்கலாம் காமராஜர் பிரதமராக ஆகாததற்கு அவர் தான் காரணம். காமராஜரை பிரதமர் ஆகாமல் தடுக்கும் அளவுக்கு அன்று கருணாநிதிக்கு அதிகாரம் இல்லை. காமராஜர் அருகில் போக கூட திமுகவுக்கு தகுதி இல்லாமல் இருந்த காலம் அது.

அப்போது  காமராஜர் தனக்கு இந்தியும், ஆங்கிலமும் தெரியாது என்று சொன்னார். இது தெரியாமல் பிரதமர் பதவியில் அமர்வது சரியாக இருக்காது என்று எண்ணினார். பிரதமரை தேர்ந்து எடுக்கும் அதிகாரமும் ஆற்றலும் காமராஜருக்கு இருந்தது, அதனால் தான் அவர் கிங் மேக்கர் என்று சொல்லப்பட்டார். ஒரு முறை லால் பகதூர் சாஸ்திரி மற்றொரு முறை இந்திரா காந்தியை தேர்வு செய்தார். அந்த காலகட்டத்தில் அதிக பெரும்பான்மை கொண்டது காங்கிரஸ்தான்.

ஒரு யோசனையோடு தான் அமித்ஷா பேசுகிறாரா? ஒரு உள்துறை அமைச்சர் பொறுப்போடு பேச வேண்டாமா? நாம் என்ன தேனாம்பேட்டை கவுன்சிலராகவா இருக்கிறோம் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா?.

ஆனால், மூப்பனார் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பை கெடுத்தது கருணாநிதி தான். காங்கிரஸ் முழு பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் அவர்கள் தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலை இருந்தது. மூப்பனார் உடன் 10 பேர் இருந்தால் அவர்கள் தான் நாடாள்வார்கள். இவர்கள் பாஜக பக்கம் செல்லக் கூடாது என்பதற்காக தான் தேவகவுடா உள்ளிட்டோருக்கு பதவி வழங்ககப்பட்டது.

தேவகவுடா பிரதமர் ஆகலாம் என்றால் மூப்பனாரும் ஆகலாம். மூப்பனார் பிரதமராக தமிழ்நாட்டிற்கு வந்தால் சால்வை அணிவிக்க, அவரை வரவேற்க செல்ல வேண்டும் என்பது தான், இதை கேவலம் என்று எண்ணி பார்த்தார் கருணாநிதி. எனவேதான் மூப்பனார் பிரதமராக கருணாநிதி முன் மொழியவில்லை.

தமிழர், குஜராத்தி என ஆள வர வேண்டும் என்பது என் கருத்து இல்லை. நேருவை போல் ஆற்றல் வாய்ந்த செல்வாக்கு மிக்க, வலிமை வாய்ந்த, உலக அரசியல் புரிந்த நேரு இடத்தில் அமர்வது எளிதான காரியம் இல்லை.

எவன் ஆற்றல், திறமை உடையவனோ,  எவன் வழி நடத்த தகுதியுடையவனோ, எவனுக்கு பொருளாதாரம் தெரிந்து இருக்கிறதோ, அவனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பந்தய குதிரையை ஒட்ட தெரிந்தவன் எவனோ அவன் வர வேண்டும் என்று எண்ணும் பாங்கு எனக்கு இல்லை.

தமிழர் பிரதமராக வருவார் என்று அமித்ஷா சொன்னதற்கு முதலமைச்சர முருகன் வருவாரா, என்று கேட்கிறார். அதற்கு பதிலாக இந்தியா ஒன்றும் இல்லாமல் போகும் என்று சொன்னால் சொல்லலாம்” என பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.