“வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு” – தெற்கு ரயில்வே அறிவிப்பு !

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தாம்பரத்திலிருந்து தென்காசி வழியாக திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டு வரும், தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு வாராந்திர சிறப்பு ரயிலானது வருகிற பிப்ரவரி 7ம் தேதி முதல் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஜூன் மாதம் 27ம் தேதி வரை 21 முறை இயக்கப்படும்.

அதேபோல் மறுமார்க்கமாக திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலானது வருகின்ற பிப்.9ம் தேதி முதல் வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஜூன் மாதம் 29ம் தேதி வரை 21 முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, செங்கோட்டை வழியாக திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு செல்லும் எனவும், அதேபோல், மறுமார்க்கமாகவும் இதே வழியில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.