விமான விபத்து – உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் !

அமெரிக்கா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் நேற்று சிறிய ரக பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளானது. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் (Ronald Regan Washington National Airport) அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.

இந்த விபத்தின் போது விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்த நிலையில் தற்போது வரை மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு பகுதியில் பணியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வாஷிங்டன் டி.சி.யில் நடந்த துயர விபத்தில் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல். இந்த துயரில் அமெரிக்க மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.