களைகட்டிய கொண்டாட்டங்கள்!! வாரிசு படத்தை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்…

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் வெளியானதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2014ம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரேநாளில்…

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை தமிழகம் முழுவதும் வெளியானதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

2014ம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரேநாளில் வெளியாகின. அதனை தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இரண்டு திரைப்படத்தின் டிரைலர்களும் வெளியான நாள்முதலே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில், நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி இரவு முதலே திரையரங்கு வாசலில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள், திரைப்படத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.

இதேபோல் நெல்லை ராம் சினிமாஸிலும், தென்காசி, ஆலங்குளம், விருதுநகரில் அப்சரா திரையரங்கு போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு வெளியானது. வாரிசு திரைப்படம் வெளியாவதை அடுத்து பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும், தேங்காய் உடைத்தும் விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.

துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு வெளியான நிலையில் அஜித், விஜய் ரசிகர்களிடையே ஆங்காங்கே கலவரம் வெடித்தது. பேனர்களை கிழித்து விஜய், அஜித் ரசிகர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை விரட்டியடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.