தென்காசியில் துணிவு திரைப்படம் ரசிகர்களின் சிறப்பு காட்சிகள் ரத்து
செய்யப்பட்ட நிலையில் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கம் முன்பு திரண்டு கூச்சலிட்டனர். அவர்களை காவல்துறை விரட்டியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
தென்காசி பி.எஸ்.எஸ் மல்டி பிளக்ஸ் திரையரங்கில் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய்
நடித்த வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக இருந்தது.
இந்நிலையில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் ரசிகர்களின் சிறப்பு காட்சிகள்
நள்ளிரவு ஒரு மணிக்கு திரையிடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில்
சிறப்பு காட்சிகளை காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்கம் முன்பு
திரண்டனர்
இந்த சூழலில் நள்ளிரவு திடீரென ரசிகர்களின் நள்ளிரவு சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திரையரங்கம் முன்பு திரண்டு இருந்த ரசிகர்களை அங்கிருந்து கலைந்துபோகும்படி போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஏராளமான ரசிகர்கள் தியேட்டருக்கு முன்பு திரண்ட
நிலையில் அங்கிருந்தவர்களை போலீசார் கலைந்து போகும்படி கூறினர்.
ஆனாலு,ம் ரசிகர்கள் தொடர்ந்து அங்கு திரண்டு நின்றதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.ரசிகர்கள் 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்க முடியவில்லை என ஆவேசமாக கூச்சலிட்டனர். ரசிகர்கள் தீடீரென சாலையில் திரண்டு
கூச்சலிட்டதால் பரப்பரப்பு அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

அதேபோல தென்காசி மாவட்டம் ஆலங்குளம் டி பி வி மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நடிகர்
அஜித் நடித்த துணிவு படம் காலை ஒரு மணி காட்சி திரையிடப்படுவதாக இருந்தது.
இந்த நிலையில் படத்தை வெளியிடுவதற்கு முறையான அனுமதி மறுக்கப்பட்டதாக
கூறப்படுகிறது. துணிவு படத்தை பார்ப்பதற்காக நடிகர் அஜித்
ரசிகர்கள் இரவு 9 மணிக்கே தியேட்டருக்கு வர தொடங்கினர்.
நள்ளிரவு ஒரு மணி காட்சி தொடங்குவதற்கு சற்று நேரம் வரை படம் திரையிடவதற்கு எந்த அனுமதியும் கிடைக்கவில்லை. இதனால் தியேட்டர் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தியேட்டர் முன்பு குவிந்திருந்த ரசிகர்களை அப்புறப்படுத்தினர். ஆலங்குளம் சேந்தமரம் ஊத்துமலை ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.







