நெசவாளர்களுக்கு பல திட்டங்களை கேட்காமலேயே வழங்கியுள்ளோம். நெசவாளர்களின் கோரிக்ககைகள் பரிசீலிக்கப்பட்டு நிச்சயம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதியளித்தார்.
கோவை சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை கருத்தம்பட்டியில் விசைத்தறி நெசவுத்தறி சங்கங்களின் பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எப்போதும் நெசவாளர்களின் துயர் துடைப்பது திமுக தான்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக தொடங்கப்பட்ட 1949-ல் நெசவாளர்கள் வாழ்தாரம் பாதிக்கப்பட்டிருந்து. 1953 ஜனவரி 4-ம் தேதி கைத்திற ஆதரவு நாள் கொண்டாடியது திமுக. திருச்சி வீதியில் அண்ணாவும், சென்னை வீதியில் கருணாநிதியும் கைத்தறி ஆடைகளை தோளிலேயே சுமந்து விற்றனர். அப்போது கைத்தறி என்பது இயக்கமாக மாறியது.
இதையும் படிக்கவும்: ”நான்கரை ஆண்டுகள் உழைத்து தான் அமைச்சராக உள்ளேன்”- உதயநிதி ஸ்டாலின்
திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகிறது. கொரோனோ மற்றும் நூல்விலை உயர்வு இருந்த காலகட்டத்தில் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. கேட்காமலேயே நெசவாளர்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு செய்தது.நெசவாளர்களுக்கு அச்சுறுத்தி வரும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நிச்சயமாக உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார். நெசவாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிகப்பட்டு படிப்படியாக நிச்சயமாக நிறைவேற்றப்படும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை திமுக அரசு ஊக்குவித்து வருகிறது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் மாநிலம் தான் தமிழ்நாடு. சிலர் தமிழ்நாட்டின் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்” என்றார்.