உயிர் மீது ஆசையிருந்தால்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

உயிர் மேல் ஆசை இருந்தால் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பேருந்து பணிமனையில், அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஓய்வறையை, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் சைதாப்பேட்டை…

உயிர் மேல் ஆசை இருந்தால் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பேருந்து பணிமனையில், அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் ஓய்வறையை, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இதனையடுத்து அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
முகக்கவசம் அணிவது கட்டாயம், அதற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உயிர் மேல் ஆசை இருந்தால் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், 640 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து நடக்கும் இடத்தின் அருகாமையில் அரசு மருத்துவமனை இருக்கும் போது அதைத் தவிர்த்துவிட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

-கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியலாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.