இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பதால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது உத்தரபிரதேச அரசு.
கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கவுதம் புத்த நகர், காஜியாபாத், நொய்டா, உள்ளிட்ட தலைநகர் டெல்லியை ஒட்டிய உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவட்டங்களிலும் ஹபூர், மீரட், புலன்சார், லக்னவ் உள்ளிட்ட மாவட்டங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்த மாவட்டங்களில் தடுப்பூசி போடப்படாதவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றும், தொற்று அறிகுறி இருப்பவர்களை உடனடியாக சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘ஆசிஸ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து’ – உச்சநீதிமன்றம்
மேலும், வரக்கூடிய நாட்களில் நோய்த்தொற்று வேகமாக பரவும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
– கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியாலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








