தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “உங்கள் ஆட்சியில் மழை பெய்யவில்லை. எங்கள் ஆட்சியில் திடீர் திடீரென்று மழை பெய்தது. களத்தில் நாங்கள் நின்றோம். எங்கள் ஆட்சியில்தான் பச்சைத் துண்டு நின்றது. கடந்த ஆண்டு அங்கு உட்கார்ந்து பட்ஜெட்டை படித்தோம். தற்போது நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். மாற்றம், மாற்றம் என்று கூறினார்கள். விவசாயிகளுக்கு மாற்றம் வரும் என்று நினைத்தோம். மாற்றத்தைக் காணவில்லை ஏமாற்றம்தான் மிஞ்சியது.
கலைஞராக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி, செய்தித்தாளைப் பார்த்து காலையிலேயே தொலைபேசியில் தொடர்புகொள்வார்கள். ஐந்து ஆண்டுகளாக நாங்கள் டென்ஷனாகவே இருந்தோம். ஆனால் நீங்கள் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள் என்றார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆனந்த்: வாய்க்கால் தகராறாக இருந்தாலும் கூட முதலமைச்சர் தொடர்புகொண்டு பேசுகிறார். ஐந்து ஆண்டுகள் நீங்கள் டென்ஷனாக இருந்ததாகக் கூறினீர்கள். ஆனால் எங்களுக்கு தினமும் டென்ஷன்தான் என்றார்.




