தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு 3500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாணமை ஆணியம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உட்பட பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில அனைத்துக் கட்சிக் கூட்டம் அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை டி.கே.சிவக்குமார், “காவிரி விவகாரத்தில் கர்நாடகா மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை காப்பதே முதன்மையானது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி தமிழ்நாடு அர்சு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் முறையிட்டார்.
இந்த முறையீட்டை ஏற்று காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மனு மற்றும் அது தொடர்பான பிற மனுக்களும் வருகின்ற ஆகஸ்ட் . 13-ஆம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உறுதி அளித்தது.




