“மோடி ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” – அண்ணாமலை பிரசாரம்!

மோடி ஆட்சியில் தான் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்…

மோடி ஆட்சியில் தான் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:  

சொத்து வரி உயர்வு,  பால் விலை உயர்வு,  மின்கட்டண உயர்வு ஆகியனவே தி.மு.க., அரசின் சாதனை.  சிப்காட் விவகாரம்- விவசாய நிலத்தை கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.

பெட்ரோல்,  டீசல்,  சிலிண்டர் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.  ஆனால், எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துவிட்டார்.

பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா,  கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.  இது தான் பா.ஜ., அரசின் சாதனை.  மோடி ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பை நாம் உறுதி செய்துள்ளோம்.  சீனாவாக இருக்கட்டும் பாகிஸ்தானாக இருக்கட்டும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்தியாவுக்கான பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.