முக்கியச் செய்திகள் தமிழகம்

“உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை” – அமைச்சர் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், கட்டுமானப் பொருள்களின் அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும் என்றுட்ம, இனி வரும் காலங்களில் கட்டுமானப்பொருட்களின் உயர்வு இருக்காது என்றும் அவர் கூறினார்.

நூறு நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 150 நாட்களாக மாற்றம் செய்யப்படும் எனத் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் கே.ஆர். பெரியக்கருப்பண் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களின் அனுமதி தேவையில்லை- மத்திய இணை அமைச்சர் அஸ்வினி

Jeba Arul Robinson

ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்டதால் ஓசூரில் பரபரப்பு!

Jeba Arul Robinson

அதிமுகவை பிரித்தாள நினைக்கும் சசிகலாவின் முயற்சி எடுபடாது: ஜெயக்குமார்

Gayathri Venkatesan