முக்கியச் செய்திகள் தமிழகம்

யானை தாக்கியதில் தந்தை- மகள் படுகாயம்

கீரிப்பாறை அருகே யானை தாக்கியதில்  தந்தையும் மகளும் படுகாயமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கீறிப்பாறை அருகே உள்ள வாழையத்து வயல் சுடலைமாடசுவாமி கோயில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், மாறாமலை காரி மணி எஸ்டேட் அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.

கன்னியாகுமரி

நேற்று காலை டீக்கடையை திறப்பதற்காக தமது மகள் ஸ்ரீநாவுடன் இருசக்கர வாகனத்தில் மணிகண்டன் சென்றுள்ளார். அப்போது, சி.எம்.எஸ் வளைவு அருகே வனப்பகுதியில் நின்றிருந்த யானை ஒன்று, அவர்களை தாக்கியுள்ளது. இதில், மணிகண்டனுக்கு தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மகள் ஸ்ரீநா, யானை தாக்கியதால் சுயநினைவின்றி விழுந்தார்.

கீரிப்பாறை காவல் நிலையம்

இதனைப் பார்த்த பொதுமக்கள் தந்தையையும் மகளையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கீறிப்பாறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Related posts

வெளிநாடுகளில் இருந்து வருவோர்க்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

Jeba Arul Robinson

வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் விரைவில் அடிக்கல் நாட்டப்படும்! – முதல்வர் பழனிசாமி

Nandhakumar

தான்சானியா அதிபர் காலமானார்!

Saravana Kumar