மூன்று முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசித்தோம் – தோழமை கட்சிகள் கூட்டத்திற்கு பின் மாணிக்கம் தாகூர் பேட்டி…!

கோவளத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தவெக சார்பில் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தவெக சார்பில் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை கோவளத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காதர் மொய்தீன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கிய கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார்

கூட்டம் முடிவுற்றதை தொடர்ந்து திருமாவளவன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது:

தவெகவின் தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. ஒருங்கிணைப்பு குழு, குறைந்தபட்ச செயல்திட்டம், கூட்டணியின் பெயர் என மூன்று முக்கிய விசயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசித்தோம். அடுத்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.