இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ள திரைப்படம் டிசி. ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் இயக்கிய அருண் மாதேஷ்வர் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி நடித்துள்ளார்.
சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ‘பிளடி வாலண்டைன்’ ப்ரோமோ வெளியாகியிருந்தது. லோகேஷ் ‘தேவதாஸ்’ கதாபாத்திரத்திலும், வாமிகா ‘சந்திரா’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் டிசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரின் படி டிசி திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.




