முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்: கவிஞர் வைரமுத்து

மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று, மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் மொழியை காக்க தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட , அந்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்யப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹந்தி திணிப்புக்கான போராட்டம் 1960-களிலேயே உச்சத்தை தொட்டிருந்தாலும், 1930-களிலேயே தொடங்கிவிட்டது.அணைத்து பள்ளிகளிலும் ஹிந்தி கட்டாய படமாக்கப்பட்டுள்ளதாக அன்றைய ராஜாஜி தலைமையிலான அரசு 1938-ஆம் ஆண்டு அறிவித்தது. இதனை எதிர்த்து தந்தை பெரியார், மறைமலை அடிகளார் ஆகியோரின் வழிகாட்டுதல் படி போற்றட்டும் வெடித்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற நடராசன், கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து ஆகியோர் உடல் நலக்குறைவு காரணமாக சிறைச்சாலையிலேயே உயிரிழந்தனர்.

இவர்களின் உயிரிழப்பை தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்ததனால் 1940-ஆம் ஆண்டு பள்ளிகளில் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கும் முறை கைவிடப்பட்டது. ஆனாலும் 1965-ஆம் ஆண்டு ஹிந்தி மொழி மட்டுமே இந்திய ஆட்சி மொழியாக இருக்கும் என்று அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான லால்பகதூர் சாஸ்திரி அரசு அரித்தது. இதனால் சற்று ஓய்ந்திருந்த போராட்டம் மீண்டும் தீவிரமடைந்து அறிஞர் அண்ணா தலைமையில் திமுகவின் மிகப்பெரும் போராட்டமாக உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் இந்த போராட்டம் உக்கிரமடைந்து நிறைய இளைஞர்கள், மாணவர்கள் தீக்குளித்தும், குண்டடிப்பட்டும் தங்களது உயிரை விட்டனர். இதனால் காங்கிரஸ் அரசிற்கு நெருக்கடி அதிகரிக்கவே ஹிந்தியுடன், ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பிற்கு பிறகே 50-நாள் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இப்படி போராடி நம் தமிழ்மொழியை காத்த, காப்பதற்கு உறுதுணையாக இருந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ஆம் தேதியான இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் ஒவ்வொரு ஊர்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் கவிஞர் வைரமுத்து அவர்களும் மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றும் விதமாக, மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்.கண்ணகி மதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சுட்டது, தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான். தேகங்கள் அணைந்துவிட்டன தீ அப்படியே செந்தீயைத் தீண்டாதே தள்ளிநில் இந்தியே என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

அதேபோல் மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றும் விதமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அன்னை தமிழ்மொழியைக் காத்திட தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றிடும் வீரவணக்க நாளில் அவர்களை தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் ‘மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம்’ என்பதை மறவாமல், அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட இந்நாளில் உறுதி ஏற்போம் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குரூப் 1 தேர்வு – விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

Dinesh A

கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது: அமைச்சர் ரகுபதி

Gayathri Venkatesan

பாதுகாப்புடன் தொடங்கிய மேற்கு வங்க 5-ம் கட்ட வாக்குப்பதிவு!

எல்.ரேணுகாதேவி