முக்கியச் செய்திகள் குற்றம்

காரில் கடத்தி செல்லப்பட்ட கவுன்சிலரையும் அவரது மகனையும் ஆந்திர மாநிலம் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிய மர்ம கும்பல்

 

கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக ஒன்றிய கவுன்சிலர்
மற்றும் அவரது மகனை போலீசாருக்கு பயந்து ஆந்திர மாநிலம் காளாஸ்திரி அருகே
காரில் இருந்து இறக்கிவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அடுத்த பல்லவாடா கிராமத்தைச் சார்ந்தவர்
ரமேஷ் குமார். இவருக்கு வயது 46. இவர் பல்லவடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளராக உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் இவரது மனைவி ரோஜா ரமேஷ் குமார் வயது 44 என்பவர் கும்மிடிப்பூண்டி
ஒன்றியத்தின் 1 வது அதிமுக ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வரும் நிலையில்
இவர்களுக்கு ஜாய் என்ற 24 வயது மகளும், ஜேக்கப் என்ற 22 வயது மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப்
ஆகியோர் திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. மேலும் வீட்டிலிருந்த இனோவா கார்
ஒன்றும் காணாமல் போனது. இந்நிலையில் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள்
உடைக்கப்பட்ட நிலையிலும் ஹார்ட் டிஸ்க் எனப்படும் சேகரிப்பு தளவாடமும் காணாமல்
போனதால் இவர்கள் இருவரும் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற
கோணத்தில் ஒன்றிய கவுன்சிலர் ரோஜாவின் கணவர் ரமேஷ் மற்றும் ரோஜாவின் தம்பி
டேவிட் சுதாகர் ஆகியோர் கும்மிடிப்பூண்டி காவல் கண்காணிப்பாளர் கிரியா சக்தி
அவர்களைச் சந்தித்து புகார் மனுவை வழங்கினார்கள்.

இதையடுத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த டிஎஸ்பி கிரியாசக்தி, சம்பவ இடத்தை
நேரில் சென்று ஆய்வு செய்தவுடன் கடத்தலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகியோரின் செல்போன்களும் அணைக்கப்பட்டுள்ளதால் தொடர்பு கொள்ளவும் இயலாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, கடத்தப்பட்ட இனோவா கார் தமிழக ஆந்திர எல்லையான
ஆரம்பாக்கம் வழியாக ஆந்திர மாநிலத்தை நோக்கிச் சென்றதாக சில அதிகாரப்பூர்வ
தகவல்கள் கிடைத்ததை அடுத்து தமிழக போலீசார் ஆந்திரா சென்று தேடி வந்தனர்.

மேலும், இன்னோவா காரில் கடத்திச் சென்றபோது ஆந்திர எல்லை ஆரூரில் வைத்து அதிமுக பெண் கவுன்சிலர் ரோஜாவின் உறவினர் பார்த்ததாகவும் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. மேலும் கடத்திச் சென்ற மர்ம நபர்கள் இருவரையும் ஆந்திர மாநிலம் காளகஸ்தி சாலையில் வரதய பாளையம் வரை அழைத்துச் சென்றது அவர்கள் வைத்திருந்த செல்போன் சிக்னல் இல்லாததால், இரு மாநில போலீசார் கூட்டாக விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில், 38 சவரன் நகையை எடுத்துக் கொண்டு 10 பேர் கொண்ட கும்பல் ஆந்திர மாநிலம் ராள்ளக்குப்பம் அருகே காரையும் சாவியையும் கொடுத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இது குறித்துக் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. பெண் கவுன்சிலரும் அவரது மகனும் கடத்தப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

G SaravanaKumar

கேப்டன் வருண்சிங் உடலுக்கு மத்தியப்பிரசேத முதலமைச்சர் அஞ்சலி

G SaravanaKumar

வங்கிகளில் 1828 காலி பணியிடங்கள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Halley Karthik