பாஜகவில் இருந்து விலகியுள்ள முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று சமூக வலைதளம் மூலம் நேரலையில் தோன்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரு புதிய பாதையை உருவாக்க 17 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். நடிகர் ரஜினிகாந்த் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கட்சியில் இணைந்து கொள்ள என அழைப்பு விடுத்தார். அதனை மறுத்துவிட்டு பாஜகவில் இணைந்தேன்.
என்னுடைய பெற்றோர்கள் தமிழ்நாட்டை தாண்டி எங்கும் செல்லவில்லை. ஆனால் நான் பல்வேறு நாடுகளுக்கு சென்று கல்வி பயின்றுள்ளேன். நான் ஒரு பெருமை மிகுந்த இந்தியன், பாரம்பரிய நான் ஒரு தமிழன். ஒரு இந்தியனாக ஒரு பெருமைமிகு தமிழ் மனிதனாக நான் பயணம் மேற்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேலே கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாட்டின் அடையாளமாக பாஜக இருக்க வேண்டும் . உள்ளாட்சித் தேர்தலில் தனியாக செல்ல வேண்டும் என கூறி இருந்தேன். எந்த உரிமைகளையும் நான் விட்டுக் கொடுக்கவில்லை.
பிரதமர் மீது அதிக மரியாதை கொண்டுள்ள மனிதன் நான். சிறிய சிறிய பிரச்சனைகள் வரும் பொழுது, பிரதமருக்கு ஒரு பிரச்சனையாக நான் இருக்கக் கூடாது. 18 மாதங்களாக என்னுடைய கருத்து வேறுபாடுகளை மிகப் பொறுமையாக சொல்லி வந்தேன்
டிசம்பர் நான்காம் தேதி நான் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தேன் . தேர்தல் பணிகளை முடித்துவிட்டு நீங்கள் செல்ல வேண்டுமென தலைமை தெரிவித்தது. அந்த அடிப்படையில் ஒரு அடிப்படை தொண்டனாக நான் அந்த பணியை செய்தேன்.
ஆனந்தமாக அன்போடு தமிழகத்தில் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளோம். அடுத்த நடைபெறும் தேர்தலில் இக்கட்சி போட்டியிடும். அதற்கான வேட்பாளர்களுக்கு தகுதிகளை மேம்படுத்துவோம். எல்லாம் உள்ளடக்கிய அரசியலை நாம் முன் நிறுத்துவோம். எல்லா தரப்பட்ட மனிதர்களுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்படும்.
அனைத்து இடங்களிலும் தூய்மையான அரசியலை கொண்டுவர வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். நிரந்தரமான தலைவர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர்கள் யாரும் இல்லை அதனை உடைப்போம்
நான் முதல் அனைத்து தலைவர்களும் தொடர்ந்து மாற்றப்படுவார்கள். நம்முடைய இயக்கம் கட்சியாக மாறும் பொழுது இந்த அனைத்தையும் நான் தெரிவிப்பேன். உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் களம் காண்போம். அந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை உருவாக்க தனி வகுப்புகள் எடுக்கப்படும்
யாருக்கும் நாங்கள் போட்டியாக இருக்க மாட்டோம். APJ கல்வி வகுப்பு மூலம் அரசியல் கற்றுக் கொடுக்கப்படும். என்னுடன் பயணிக்கும் நபர்களுக்கு மெதுவாக பொறுமையாக பயணிக்க வேண்டும்.
சண்டை போடுவது எங்களுடைய வேலை இல்லை மாற்றத்தை கொடுப்பதுதான் எங்கள் வேலை. கைப்பிடித்து சென்றவர்களுக்கு நன்றியோடு இருப்போம். ஒரு புதிய தலைமுறையை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும்
அனைத்து கட்சித் தலைவர்களை பார்ப்பது போல தான் நான் பாஜகவை பார்த்தேன். நான் யாரிடமும் சண்டை போட்டு கட்சியிலிருந்து வெளியே வரவில்லை
நாககரிகரமான அரசியலை முன்னெடுப்போம். யாருக்கும் நாம் போட்டி கிடையாது. அனைவருக்கும் பொறுமையாக இருங்கள். சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேச வேண்டாம். முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வருவது தான் நம்முடைய முதன்மை குறிக்கோள். மாறுவோம் மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.





