தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம் ‘பெடி’. உப்பென்னா பட இயக்குநர் புஜ்ஜி பாபு இயக்கியுள்ள இப்படத்தில் ஜான்வி கப்பூர், சிவாராஜ் குமார், திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இப்படத்தில் மலைவாழ் இளைஞராக ராம் சரண் தோன்றியுள்ளார்.
தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று வெளியான பெத்தி திரைப்படம் ஒரே நாளில் 135 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




