ஊழலுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குடும்ப அரசியலை ஒழிக்கவும் பாரதிய ஜனதா கட்சி உறுதி எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கட்சி கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களிடம் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பதற்காக தொண்டர்கள் எத்தனையோ தியாகங்களையும், கடின உழைப்பையும் கொடுத்துள்ளனர். அதற்காக ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களையும் பாராட்டுகிறோம். அவர்களுக்கு இந்த நாளில் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இன்று நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் அனைவருக்கும் அவருடைய ஆசிர்வாதம் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.
“இன்று, அனுமனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பார்த்தால், அது நம்மை மட்டுமின்றி, இந்தியாவின் வளர்ச்சி பயணத்திற்கும் பலவழிகளில் ஊக்குவிக்கிறது. ஊழல், சட்டம் மற்றும் ஒழுங்கை எதிர்த்துப் போராடுவதற்கு, பா.ஜ.க., பகவான் அனுமனின் உத்வேகத்தைப் பெறுகிறது. அனுமானின் முழு வாழ்க்கையையும் நாம் பார்த்தால், “அவரால் செய்ய முடியும்” என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது தெரியும். அந்த எண்ணம்தான் அவரது எஎல்லா வெற்றிக்கும் காரணமாக இருந்துள்ளது.
ஊழலுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் தேவையான சக்தியை பாஜக அனுமனிடம் இருந்து பெற்று வருகிறது. 2014 முதல் இந்தியா புதுவேகத்துடன் முன்னேறி வருகிறது. ஜனநாயக கொள்கைகளை பலப்படுத்த பாரதிய ஜனதா கட்சி பாடுபட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சியே எங்கள் பிரதான நோக்கம். அதற்காகத்தான் 80 கோடிக்கும் அதிகமான ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன; சுகாதார காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். அப்போது ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு என்றாவது ஒரு நாள் அது வரலாறாக மாறும் என்று எதிர்க்கட்சியினர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். பாஜக செய்து வரும் வேலையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. “சமூக நீதி முழக்கத்தை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திய எதிர்க்கட்சிகளைப் போல் இல்லாமல், சமூக நீதிக்காகவும், அனைத்துப் பிரிவினருக்கும் வேலைவாய்ப்பிற்காகவும் பாஜக பாடுபடுகிறது. மிகப் பெரிய கனவுகளைக் காண்பதிலும், மிகப் பெரிய இலக்குகளை அடைவதிலும் பாஜக நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க பாஜக உறுதி பூண்டுள்ளது. இதே போல சட்டம் ஒழுங்கை சீர் செய்ய உறுதி எடுத்து கொள்வோம் என பிரதமர் மோடி கூறினார்.
आज हम सभी अपनी पार्टी का स्थापना दिवस मना रहे हैं। मां भारती की सेवा में समर्पित प्रत्येक भाजपा कार्यकर्ता को मैं बहुत-बहुत बधाई देता हूं।
– पीएम @narendramodi #BJPSthapnaDiwas pic.twitter.com/yL3XSNgOss
— BJP (@BJP4India) April 6, 2023
- பி.ஜேம்ஸ் லிசா