முக்கியச் செய்திகள் தமிழகம்

நெல்லை எஸ்.பி-க்கு பிடிவாரண்ட் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி தென் மண்டல ஐ.ஜி.-க்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச்
சேர்ந்த பரமானந்தம் என்கிற பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலத்தை ஆக்கிரமிப்பு
செய்து, வழியை மறித்து வேலியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த ஜூன் 10ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இருமுறை அவகாசம் வழங்கிய பிறகும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் நோட்டீசை திருநெல்வேலி எஸ்.பி. மதித்து அறிக்கை தாக்கல் செய்யாததால், ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி கடந்த அக்டோபர் 27ஆம் தேதி ஆணையம் உத்தரவிட்டது. அந்த அழைப்பாணையைப் பெற்ற பின்னரும், நெல்லை எஸ்.பி. ஆஜராகாத நிலையில், இறுதி வாய்ப்பாக நவம்பர் 30ல் ஆஜராக வேண்டும் எனவும், நோட்டீசை அலட்சியப்படுத்தியதற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என காரணம் கூறவும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நவம்பர் 30ஆம் தேதி, ஆணையம் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தபோது, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. ஆஜராகாமல், அவருக்கு பதிலாக கூடுதல் எஸ்.பி. மாரிராஜன் என்பவரை ஆஜராக அனுப்பி உள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ஆணையத்தின் நோட்டீஸ்கள் தம்மைக் கட்டுப்படுத்தாது என்றும், ஆணையத்திற்கு நேரில் ஆஜராவது தகுதிக்கு குறைவானதாகவும் எஸ்.பி கருதுவதாக குறிப்பிட்டுள்ளது.

எனவே திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் என்பவருக்கு ரூ.500 அபராதம் விதித்து, அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி தென் மாண்டல ஐ.ஜி.-க்கு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’தொடரை ரத்து பண்ணுங்க…’பாக். அணிக்கு எதிராக கொதிக்கும் பங்களாதேஷ் ரசிகர்கள்

EZHILARASAN D

முன்கூட்டியே நிறைவடையும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

EZHILARASAN D

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

EZHILARASAN D