பொன்னமராவதி அருகே இரட்டை கண்மாய் என அழைக்கப்படும் உடையான் கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்திலுள்ள இரட்டை கண்மாய் என்று அழைக்கப்படும் உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. நெல் அறுவடைக்கு பிறகு கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய பாசன கண்மாய்களில் ஜாதி, மதம், பாராமல் அனைத்து மக்களும் ஒற்றுமையாக கலந்து கொள்வதே மீன்பிடி திருவிழாவின் நோக்கம் ஆகும்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாள்தோறும் மீன்பிடித் திருவிழா கோலகாலமாக நடைபெற்று வருகிறது. அதனையடுத்து பொன்னமராவதி அருகே மைலாப்பூர் கிராமத்திலுள்ள இரட்டை கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் குவிந்தனர். ஓரே நேரத்தில் போட்டிக்கொண்டு கண்மாயில் இறங்கி பராம்பரிய முறைப்படி மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்பிடித்தனர். அதில் ஒவ்வொருவரும் நாட்டு வகை, கெளுத்தி குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை போன்ற மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: