மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரவு பகல் பாராமல் கண்காணியுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை விழிப்புடன் திமுக வேட்பாளர்களும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள், தொண்டர்கள் கண்காணித்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் வேலை முடிந்து விட்டது என்று நினைக்காமல் இனிதான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் 24 மணிநேரமும் உறங்காமல் இரவு பகல் பாராமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக பாதுகாப்பது நமது கடமை என்றும் அறிவுறுத்தியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரத்தை பாதுகாப்பது காவல்துறையின் பணி என்று நினைத்து கழக வேட்பாளர்களும் கட்சித் தொண்டர்களும் கவனக்குறைவாக இருந்து விடக் கூடாது என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுருத்தியுள்ளார்.







