கடலூர் காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வாக்கு, கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சர்கார் பட பாணியில் அவர் வாக்களித்தார்.

கடலூர் காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் வாக்களிக்க சென்றபோது, அவரது வாக்கு பதிவாகிவிட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் வாக்களிக்க வேண்டும் என முறையிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆலோசித்த வாக்குப்பதிவு மைய அதிகாரிகள், 49 “P” படிவத்தைப் பயன்படுத்தி டெண்டர் முறையில் வாக்களிக்க அனுமதித்தனர். 49 “P” முறைப்படி அளிக்கப்படும் வாக்குகள் பொதுவாக எண்ணப்படாது. மிகக்குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெறும்போது மட்டுமே அந்த வாக்குகள் எண்ணப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்