பல்லாவரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரனுக்கு ஆயிரம் கிலோ எடை கொண்ட ராட்சத ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது.
பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி, அஸ்தினாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தநிலையில் பல்லாவரம் நெமிலிச்சேரி 18 வது வார்டில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு, அதிமுக மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் மோசஸ் ஜோஸ்வா ஏற்பாட்டில் ஆயிரம் கிலோ எடை கொண்ட ராட்சத ஆப்பிள் மாலை அதிமுக வேட்பாளருக்கு அணிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனை தொடர்ந்து, வேட்பாளருக்கு பெண்கள் மலர் தூவியும், ஆர்த்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.