தமிழகத்தில் உருமாறிய கொரோனா நோய் தொற்று இல்லை என மாநில சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையத்தை அவர் இன்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில், கடந்த 2 வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,779 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,73,219ஆக அதிகரித்துள்ளது. தற்போது அதகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். வரும் நாட்களில் கொரோனா தினசரி பாதிப்பு தமிழகத்தில் 2 ஆயிரத்தைத் தொட உள்ளதாகவும், இது மேலும் அதிகமாகி பின்னர்தான் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முகக் கவசம் அணிவதன் மூலம்தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பு குறையும் எனவும் கூறினார்.