மதுரை கப்பலூர் தனியார் கல்லூரியில் 140 அடி உயரத்தில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை வண்டியூர் அம்மா திடலில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய தகவல் தொழில் நுட்ப இணையமைச்சர் எல். முருகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகர்கள் சுந்தர் சி, விஜயகுமார் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர்
”வ.உ.சி அவர்களுக்கு 140 அடியில் சிலை மதுரையில் நிறுவ வேண்டும் அடிக்கல் நாட்டுவதற்கு என்னிடத்தில் கேட்டுக் கொண்டார்கள்.
வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தியாகத்தை மட்டுமே கொண்ட வாழ்ந்து மறைந்த தலைவர் வ உ சி சிதம்பரம்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை சிறைச்சாலையில் இருந்த பொழுது யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவர் சிறைச்சாலையை விட்டு வெளியே இரண்டு பேர் மட்டுமே அவரை வரவேற்க வந்தனர்
உலகத்தில் தர்மத்தை மிஞ்சிய சக்தி இல்லை. தர்மம் வென்றே தீரும். மாடுகளால் இழுக்கப்பட்ட செக்கை தனது கைகளால் இழுத்தவர் வ உ சி சிதம்பரம் பிள்ளை. வ.உ.சி. இழுத்த அந்த செக்கை தயவு செய்து அனைவரும் கோயம்புத்தூர் சிறைக்கு சென்று பார்க்க வேண்டும்.
வேளாண் குடும்பத்தில் பிறந்து கல்வி வேண்டாம் களப்பையே உலகம் என்று இருந்த அந்த காலத்தில் சட்டம் படித்தார். வக்கீலுக்கு படித்து வழக்கறிஞராக பணி செய்தவர்” என்றார்.







