சூப்பர் 8 சுற்று : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு……..!

டி 20 உலககோப்பை தொடர்ன் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

டி 20 உலக கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இலங்கையை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அகமாதாபத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை எந்த வித மாற்றமும் இல்லை. தென்னாப்பிரிக்க அணியில் ஜேசன் ஸ்மித்திற்கு பதிலாக டேவிட் மில்லரும், க்வேன்னா மபாகாவுக்கு பதிலாக மார்கோ ஜான்சனும், ஜார்ஜ் லிண்டேவுக்கு பதிலாக கேஷவ் மகாராஜாவும், அன்ரிச் நார்ட்ஜேவுக்கு லுங்கி நிகிடியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம் :

இந்தியா :  அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (WK), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (C), ஹார்டிக் பாண்ட்யா, சிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

தென்னாப்பிரிக்கா :  ஐடன் மார்க்ராம் (C), குயின்டன் டி காக் (WK), ரியான் ரிக்கல்டன், டெவால்ட் பிரெவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், காகிசோ ரபாடா, கேஷவ் மகாராஜ் மற்றும் லுங்கி நிகிடி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.