இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் 2026-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் 608 இடங்களும், தமிழ்நாட்டில் மட்டும் 35 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பயிற்சியில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேஷன் ஆகிய பொறியியல் பிரிவுகளில் ஆட்கள் நிரப்பப்படுகிறார்கள்.
தொழிற்பயிற்சி வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 02.03.3036 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 25 வயது வரை இருக்கலாம். இதில் ஒபிசி வகுப்பினர்களுக்கு 3 வருடங்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர்களுக்கு 5 வருடங்கள், மாற்றுத்திறனாளி விண்ணப்பதார்களுக்கு 10 வருடங்கள் தளர்வு உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்……….?
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேஷன் ஆகிய பொறியியல் பட்டப்படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே தொழிற்பயிற்சி பெற்று வரும் நபர்களும் பணி அனுபவம் பெற்றவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுமுறை மற்றும் உதவித்தொகை
விண்ணப்பதார்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகும். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்படுவார்கள். இப்பயிற்சிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் உள்ள http://jobs.hpcl.co.in/Recruit_New/recruitlogin.jsp என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பிப்ரவரி 16 முதல் இந்த தொழிற்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







