சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய வி.கே.சசிகலா…

தமிழ்நாடு தலை நிமிரவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் வலியுறுத்தி வி.கே. சசிகலா இன்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். சென்னை, தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்படும் வி.கே. சசிகலா, கிண்டி, கதிப்பாரா மேம்பாலம், போரூர் வழியாக பூந்தமல்லி…

தமிழ்நாடு தலை நிமிரவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் வலியுறுத்தி வி.கே. சசிகலா இன்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

சென்னை, தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்படும் வி.கே. சசிகலா, கிண்டி, கதிப்பாரா மேம்பாலம், போரூர் வழியாக பூந்தமல்லி சென்றடைய உள்ளார். தொடர்ந்து, குமணன் சாவடியிலிருந்து சுற்றுப் பயணத்தைத் தொடங்கும் அவர், திருமழிசை, வெள்ளவேடு, பாக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க உள்ளார்.

அண்மைச் செய்தி: ‘புகைப்பிடிப்பதை விடுவது அவ்வளவு சுலபமா?’

கடந்த மாதம் 26-ஆம் தேதி தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்கத் திருத்தணி சென்ற வி.கே. சசிகலா, இரண்டாவது முறையாக மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அடுத்ததாக வரும் ஜூலை 5-ஆம் தேதி திண்டிவனம், ஜூலை 7-ஆம் தேதி வானூர், ஜூலை 8-ஆம் தேதி உளுந்தூர்பேட்டை எனத் தொடர் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ள வி.கே. சசிகலா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.