பீகாரில் விரைவு ரயிலில் திடீர் தீவிபத்து

பீகார் மாநிலம் பெல்வா ரயில் நிலையம் அருகே விரைவு ரயிலின் எஞ்ஜினில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  பீகார் மாநிலத்திலிருந்து பயணிகள் விரைவு ரயில் ஒன்று ரக்சௌலிலிருந்து நர்கதியாகஞ்ச் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரயில் காலை…

பீகார் மாநிலம் பெல்வா ரயில் நிலையம் அருகே விரைவு ரயிலின் எஞ்ஜினில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 

பீகார் மாநிலத்திலிருந்து பயணிகள் விரைவு ரயில் ஒன்று ரக்சௌலிலிருந்து நர்கதியாகஞ்ச் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரயில் காலை சுமார் 6 மணி அளிவில் பெல்வா ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது ரயில் எஞ்ஜிலிருந்து புகை வர ஆரம்பித்தது. புகை வர தொடங்கிய சிறிது நேரத்தில் தீ மள மளவென பற்றி எரிந்தது.

இதனை பார்த்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். எஞ்ஜினில் பற்றிய தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவாமல் உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.