ஆளுநருக்கு எதிராக தவெக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு…!

தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அகக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே நேரம் இரு தொகுதிகள் வெற்றி பெற்ற விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் தவெகவிற்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளது. ஆட்சியமைக்க தவெகவிற்கு 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

இதனை தொடர்ந்து பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை திரட்டும் பணியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக தவெக தரப்பில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது. இதில் காங்கிரஸ் (5) சிபிஐ (2), சிபிஎம் (2) ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது. மேலும் 2 எம்.எல்.ஏக்கள் கொண்ட விசிகவும் தவெகவிற்க் ஆதரவு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தவெக 118 என்கிற பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை எட்டி விடும்.

இந்த சூழலில் தவெகவை சேர்ந்த வழக்கறிஞர் எழிலரசி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.