புகைப்பிடிப்பதை விடுவது அவ்வளவு சுலபமா?

எந்த ஒரு பழக்கத்தையும் கற்றுக் கொள்வது சுலபம். ஆனால், அதனை விடுவது சற்று கடினம். அதிலும், அதற்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு சாதாரணமான ஒன்றாக இருப்பது இல்லை. அப்படியான ஒரு கெட்டப்…

எந்த ஒரு பழக்கத்தையும் கற்றுக் கொள்வது சுலபம். ஆனால், அதனை விடுவது சற்று கடினம். அதிலும், அதற்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு சாதாரணமான ஒன்றாக இருப்பது இல்லை. அப்படியான ஒரு கெட்டப் பழக்கம் தான் இந்த புகைப்பிடிக்கும் பழக்கம். இந்த பழக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பதனை காணலாம்.

தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, அதைக் கைவிடும் போது, உடலும் மனதும் பல பக்கவிளைவுகளைச் சந்திக்கும் எனவும், அதற்கு புகைப்பிடிக்கும் பழக்கம் ஒன்றும் விதி விலக்கல்ல எனவும் பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால், புத்தகத்தைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடப் பல வழிகள் உள்ளது. அதில் நிகோட்டின் பேட்ச், ஹிப்நாசிஸ் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் என சில வழிகள் பொதுவாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதேபோல, எந்த விட மருந்துகளும் இல்லாமல் கூட இந்த தீய பழக்கத்திலிருந்து விடுபட முடியும் எனப் பலரும் கூறுகின்றனர்.

அண்மைச் செய்தி: ‘திருத்த முடியாத விதியை திருத்தப்பார்க்கிறார்கள்-டிடிவி தினகரன் காட்டம்’

புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே நிறுத்த, புகைப்பிடிக்கும் வழக்கம், உங்கள் சார்பு நிலையின் உண்மைகள் நிலை மற்றும் உங்களுக்கு ஏற்ற உத்திகளை முதலில் கண்டறிய வேண்டும். புகைப்பிடிப்பதில் நீங்கள் எந்த வகையைச் சார்ந்தவர், வாழ்க்கையில் எந்த தருணம் உங்களை புகைப்பிடிக்க தூண்டுகிறது மற்றும் ஏன் என்பதையும் கண்டறிய வேண்டும். இதனால், இந்த பழக்கத்தை நிறுத்த எந்த டிப்ஸ் அல்லது தெரபியை கையாளலாம் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

அந்த எண்ணத்தைப் போக்க உடற்பயிற்சியில் ஈடுபடுதல், நண்பர்களிடம் சவால் விடுதல், மதுபானங்கள் மற்றும் இதர பானங்களைத் தவிர்த்தல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், பற்களைச் சுத்தமாக வைத்திருக்க மனதை ஒருங்கிணைப்பது ஆகியவை புகைப்பிடிப்பதை விடுவதற்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.