VJS51 – திரைப்படத்தின் முக்கிய அப்பேட் இன்று மாலை வெளியாகிறது!

விஜய் சேதுபதியின் 51வது திரைப்படத்தின் தலைப்பை இன்று மாலை 6.30 மணியளவில் அறிவிக்க உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது…

விஜய் சேதுபதியின் 51வது திரைப்படத்தின் தலைப்பை இன்று மாலை 6.30 மணியளவில் அறிவிக்க உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், இவரின் 50-ஆவது படமான  “மகாராஜா” விரைவில் வெளியாக உள்ளது. ‘குரங்கு பொம்மை’ திரைப்படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் 51வது திரைப்படத்தின் தலைப்பு இன்று மாலை 6.30 மணியளவில்  வெளியாகும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : “சூர்யா 44” படத்தில் ஜோடியாக இணைந்த பூஜா ஹெக்டே… படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

விஜய் சேதுபதியின் 51 வது திரைப்படத்தை ஆறுமுககுமார் என்ற இயக்குனர் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடதக்கது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

https://x.com/7CsPvtPte/status/1791371683145908296

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.