“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார்” – நடிகை ஸ்ரேயா ரெட்டி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார் என நடிகை ஸ்ரேயா ரெட்டி தெரிவித்தார். நடிகர் பரத், நடிகைகள் ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் ‘தலைமைச் செயலகம்’ என்ற…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார் என நடிகை ஸ்ரேயா ரெட்டி தெரிவித்தார்.

நடிகர் பரத், நடிகைகள் ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் ‘தலைமைச் செயலகம்’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கின்றனர்.  இத்தொடரில் கிஷோர், ஆதித்யா மேனன் கவிதா பாரதி, தர்ஷா குப்தா, சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த தொடரை தேசிய விருது பெற்ற பட இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார்.  இதனை ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரித்துள்ள நிலையில், ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இத்தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று (மே.17) வெளியானது.  இந்த நிலையில், இத்தொடரில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி நேர்காணல் ஒன்றில் பேசுகையில், “25 வருடமாக நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பக்கத்து வீட்டில் வசித்திருக்கிறேன்.  நான் சிறிய வயதிலிருந்தே அவர்கள் வெளியே செல்லும்போது கை அசைப்பேன்.

காரில் இருந்தபடி அவர்களும் கை அசைப்பார்கள்.  சில நேரத்தில் வேலையாக இருந்தால் பார்க்கமாட்டார்கள்.  அப்போதிலிருந்தே எனக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல் இருக்கனும் என்ற ஆசை இருந்தது.  அவர்தான் எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.