மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலிற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடியேற்ற விழா இன்று நடைபெற்றது.

மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்று கொடியேற்றி திருவிழாவினை துவங்கி வைத்தார்.பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விதவிதமான ஆராதனைகளில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

முதல்நாளான இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனை காட்டப்பட்டது. நிகழ்வின் சிகரமாக வருகிற 4ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறும்.இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பகதர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து சென்றனர்.
—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.