மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப தூண்களை 6 ஆண்டுகளுக்கு பின்னர் சீரமைக்கும் பணிகள் இன்று துவங்கியது.
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் உலகப்புகழ்பெற்ற திருக்கோவில்களில் முக்கியமான ஒன்றாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபட்டு செல்லும் இக்கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி திடீரென தீப்பற்றியது.இதில் கிழக்கு வாசல் ராஜகோபுரம் வழியாக சுவாமி சன்னதிக்கு செல்லும் மண்டபம் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்நிலையில் மண்டபத்தை சீரமைக்கும் பணிக்கு ராசிபுரம் பாலக்கோடு அருகேயுள்ள பட்டினம் மலையடிவாரத்தில் உள்ள கற்களை பயன்படுத்த அரசு முடிவு செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைதொடர்ந்து அங்குள்ள கற்களை வெட்டியெடுத்து கோயிலுக்கு சொந்தமான கூடல்செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டது. தூண்களை செதுக்கும் பணி திருப்பதியை சேர்ந்த ஸ்பதி வேல்முருகன் என்பருக்கு வழன்ங்கப்பட்டது. இதற்கென மொத்தமாக ரூ.18 கோடி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் தீ விபத்தில் சேதமடைந்த கோயில் வளாகத்தை சீரமைக்கும் பணி சிறப்பு பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்குள் இதன் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன்,மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் எராளமான அதிகாரிகள் பங்கேற்றனர்.
—வேந்தன்