முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

பொன்னியின் செல்வன் 2 : இசை & ட்ரெய்லரை வெளியிடும் உலகநாயகன்!!

பொன்னியின் செல்வன் 2 படத்தின்  இசை மற்றும்  ட்ரெய்லரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் முதல் பாகம் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ரமலான் நோன்பும் இந்திய பாரம்பரிய உணவுகளும்

இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு  ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், மார்ச் 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு  நடைபெற உள்ளது.

இதனையும் படியுங்கள்: பொன்னியின் செல்வன் 2 இசை – க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்

இந்நிலையில், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய விருந்தினர் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் கலந்து கொள்வதாக லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெர்விக்கப்பட்டுள்ளது. இந்த டிவீட்டில் உலக நாயகன் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

G SaravanaKumar

சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Jayasheeba

அமைச்சர் உதயநிதியின் ஆக்சன் பிளான்: களமிறங்கும் படை

Jayakarthi