விஷால், சுனேனா நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியிடப்பட்டுள் ளது.
நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் விஷால் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமானது.
இதில் விஷால் ஜோடியாக, சுனேனா நடிக்கிறார். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை ஏ.வினோத்குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். சாம். சி.எஸ் இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு ’லத்தி என்று தமிழிலும் சார்ஜ் என்று ஆங்கிலத்தில் சிறியதாகவும் டைட்டில் வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Here we go!!!
The official #Title teaser of #Vishal32 is out now!▶️https://t.co/JIyuF5nHYd#LaththiCharge #Laththi@_RanaProduction @dir_vinothkumar @actorramanaa @nandaa_actor @balasubramaniem @SamCSmusic @dhilipaction @TheSunainaa @skannanartdir @HariKr_official pic.twitter.com/H71asg52kM
— Vishal (@VishalKOfficial) October 17, 2021
விஷால், இப்போது தீபாவளிக்கு வெளியாகும் ’எனிமி’ படத்தின் தமிழ், தெலுங்கு டப்பிங் பணிகளில் இருக்கிறார். அடுத்து, ’வீரமே வாகை சூடும்’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து ’லத்தி’ படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெறும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.








