முக்கியச் செய்திகள் இந்தியா

கனமழை, நிலச்சரிவு: கேரள முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள் ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று என கூறப்படுகிறது. பலரை காணவில்லை. அங்கு மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவம் மற்றும் கடற்படை ஈடுபட்டுள்ளனது.

இந்நிலையில், கேரள நிலவரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அவர் கேட்டறிந்துள்ளார்.

கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்திருப்பது துரதிர்ஷ்டமானது என்றும் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலையும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  அனைவரும் பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்க பிரார்த்திப்பதாகவும் ட்விட்டரில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

குட்டி இட்லி முதல் குஷ்பு இட்லி வரை பார்த்தாச்சு.. இது குச்சி இட்லியாம்ல!

Halley Karthik

பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

Gayathri Venkatesan

நளினியின் பரோல் மனு பரிசீலனையில் உள்ளது – தமிழ்நாடு அரசு

Arivazhagan CM