முக்கியச் செய்திகள் உலகம் சினிமா

விண்வெளியில் ஷூட்டிங் ஓவர்: பூமிக்குத் திரும்பியது ரஷ்ய படக்குழு

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஷ்யப் படக்குழு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.

பிரபல ரஷ்ய திரைப்பட இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ (Klim Shipenko). இவர் ’தி சேலஞ்ச்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் கதை விண்வெளியில் நடப்பது போல அமைக்கப் பட்டுள்ளது. இதற்காக விண்வெளியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்த படக்குழு, சர்வதேச விண்வெளி மையம் செல்ல தீர்மானித்தது.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் இயக்குநர் க்ளிம் ஷிபென் கோ (38), நடிகை யுலியா பெரெஸில்ட் ( Yulia Peresild), விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெ ரோவ் ஆகியோர் கடந்த 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென் றனர்.

கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து சோயூஸ் எம்.எஸ்-19 ராக்கெட் மூலம் அவர்கள் விண்வெளிக்குச் சென்றனர். அங்கு 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பின், இயக்குநர் க்ளிம் ஷிபென் கோvum, நடிகை யுலியா பெரெஸில்ட்டும் பூமிக்கு திரும்பியுள்ளனர்.  சோயூஸ் எம்எஸ் 18 விண்களம் மூலம்  திரும்பிய அவர்களுடன் ஓலெக் நோவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரரும் தனது 190 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளார்.

இவர்கள் தரையிறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் புதிதாக 18,166 பேருக்கு கொரோனா

Halley karthi

போதை வழக்கு: போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை கைது

Saravana Kumar

”அரசியலை விட்டு போகிறேன்”- அரசியலுக்கு முழுக்கு போட்டார் தமிழருவி மணியன்!

Jayapriya