விருதுநகரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சேமிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
தண்ணீரை சேமிப்பதின் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்பட்டு
வருகிறது. இதனை முன்னிட்டு விருதுநகரில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர்.இப்பேரனியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
நீர் சேமிப்பதன் அவசியம் பொறித்த முகமூடிகளை இப்பேரணியில் மாணவர்கள் அணிந்திருந்தனர்.மேலும் வான் தருவது மழை,அதை வீணாக்குவது நம் பிழை,
நீர் இயற்கைதாயின் ஆசிர்வாதம்,மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.
உயர்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி மணிக்கூண்டு வழியாக வந்து தேசப்பந்து மைதானத்தில் நிறைவடைந்தது.
—வேந்தன்







