பொதுமக்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்-நாகையில் பரபரப்பு!

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட இருக்கை ஊராட்சியில் அடிப்பட்டை வசதிகளை செய்து தர வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்கள்டன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்திற்க்கு உட்பட்ட இருக்கை ஊராட்சியில் 1000த்திற்கும் மேற்பட்ட…

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட இருக்கை ஊராட்சியில் அடிப்பட்டை வசதிகளை செய்து தர வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்கள்டன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்க்கு உட்பட்ட இருக்கை ஊராட்சியில் 1000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் ஆறாயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவ்ஊராட்சியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் செயல்படுத்தவில்லை என இப்பகுதியினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஊரில் உள்ள கடைத்தெரு சாலை,தெற்குதெரு சாலை, வடக்கு தெரு, பள்ளிக்கூட சாலை உள்ளிட்டவை பழுந்தடைந்து மோசமான நிலையில் உள்ளன.இதனை அப்புறத்தி புதிய சாலைகள் அமைத்து தர இப்பகுதி மக்கள் பல முறை ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட இவ்வூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும்,சாலைகளை புதிதாய் அமைத்து தரக்கூறியும் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்.இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
–வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.