சுற்றுலாப் பயணிகளை ஓட ஓட துரத்திய காண்டாமிருகம் – பரபரக்கும் வைரல் வீடியோ

சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் இருந்தபடியே வனவிலங்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென ஒரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து சுற்றுலாப் பயணிகளை துரத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாகவே காடுகளில் சஃபாரி செல்வது…

சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் இருந்தபடியே வனவிலங்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென ஒரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து சுற்றுலாப் பயணிகளை துரத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாகவே காடுகளில் சஃபாரி செல்வது என்பது சுவாரஸ்யமான மற்றும் திகிலான நிகழ்வாக இருந்தாலும், மனிதர்கள் கூட்டம் கூட்டமாக சென்று வனவிலங்குகளை வேடிக்கைப் பார்க்கும்போது வனவிலங்குகளின் பிரைவசி என்று சொல்லக்கூடிய, தனிப்பட்ட இயற்கை வாழ்வுமுறை பெரியளவில் பாதிக்கப்படுகிறது. அதனால் சில சமயம் வனவிலங்குகள் வெகுண்டெழும்போது மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல் மோசமான சம்பவமாக மாறி விடுகிறது.

அந்த வகையில், காட்டுக்கு வனவிலங்குகளைப் பார்க்க சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் இருந்தபடியே வனவிலங்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென ஒரு காண்டாமிருகம் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து சுற்றுலாப் பயணிகளை துரத்திய வீடியோ தற்போது அதிக நபர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை அனஸ்தேசியா சாப்மேன் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் நேற்று ஒரு ஆக்ரோஷமான காண்டாமிருகத்துடன் மிகவும் மோசமான அனுபவம் எனக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கு மேல் முழு வேகத்தில் எங்களை துரத்திய அந்த காண்டாமிருகம், 3-4 நிமிட நேரங்கள் எங்களை நோக்கியே ஓடி வந்தது. எங்கள் வழிகாட்டி எங்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக மிகவும் சேறும் சகதியுமான மற்றும் நிலையற்ற சாலைகள் வழியாக தன்னால் முடிந்தவரை வேகமாக
ஓட்டிக்கொண்டிருந்தார்.

இந்த செயல் நிச்சயமாக சாதாரணமானது அல்ல, மேலும் எங்கள் வழிகாட்டி எங்களிடம் கூறும்போது, இன்றுவரை அவரது முதல் 5 மிகவும் ஆபத்தான விலங்கு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்றார். இது இயற்கையில் முற்றிலும் பைத்தியக்காரத்தனமான நாள் மற்றும் இந்த விலங்குகளின் வீடுகள் மற்றும் பிரதேசங்களில் நாங்கள் விருந்தினர்கள் மட்டுமே என்பதை இந்த செயல் நினைவூட்டுகிறது” என்று அவர் அந்த வீடியோவுடன் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 24 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.