தமிழகம் செய்திகள்

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.


விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நாகபுரி தரச் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையில் சுமாா்40-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு பேன்சி ரக பட்டாசுகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், நேற்று இந்த ஆலையில் உள்ள ஓர் அறையில் பேன்சி ரக பட்டாசுகளுக்கான கருந்திரி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருந்திரியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ பரவி வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சேடப்பட்டி பாண்டுரங்கன் மகன் முத்துப்பாண்டி (42), கட்டனார்பட்டி பொன்னுசாமி மகன் கருப்பசாமி (60) ஆகியோா பலத்த காயமைடந்தனர்.

இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். முன்னதாக இந்த வெடிவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பட்டாசு ஆலையின் உரிமையாளர் ரமேஷ் (36), ஊழியர் சுப்புராஜ் (35) ஆகியோரை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு: மா.சுப்பிரமணியன்

Vandhana

பொள்ளாச்சி அருகே ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து – இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பலி

Web Editor

நீண்ட கால விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மார்க்சிஸ்ட்

Janani