முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

இன்ஸ்டகிராமில் ஒரு பதிவிற்கு ரூ. 5 கோடி சம்பாதிக்கும் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டகிராமில் ஒரு பதிவிற்கு 5 கோடி சம்பாதிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆண்டிற்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர்கள் நடிக்கும் சினிமாக்கள் மற்றும் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் ஆண்டு வருமானமும் கோடிகளை தாண்டும். அதுவும் நட்சத்திர வீரராக ஜொலிப்பவரிகளின் வருமானம் பல கோடிகளை எட்டும். அதற்கும் மேலாக அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் சொல்லவே வேண்டாம், தொலைக்காட்சியில் வரும் அனைத்து விளம்பரங்களிலும் இவர்கள் மட்டுமே தோன்றுவார்கள். சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி, யுவராஜ் சிங், விராட் கோலி உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும் இதில் அடங்குவர். அதைப்போலவே பாலிவுட் சினிமாவில் ஜொலிக்கும் அமிதாப் பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஆமீர்கான், தமிழில் கமல்ஹாசன், சத்யராஜ், விஜய், சூர்யா, விஜய் சேதுபேதி, நயன்தாரா உள்ளிட்ட பல நடிகர்களும் விளம்பரங்களில் தோன்றி நடித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் விராட்கோலி இப்பொழுது செய்தியில் இடம்பிடித்திருப்பது அவர் கிரிக்கெட் மூலம் வரும் வருமானத்திற்காகவோ அல்லது விளம்பரப் படங்களில் நடிப்பதன் மூலம் வரும் வருமானத்திற்காகவோ இல்லை. ஒரு விளம்பர படம் எடுக்க வேண்டுமானால் அதற்கும் பல லட்சங்கள் முதல் முதல் கோடிகள் வரை செலவு செய்கிற நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் நேரச்செலவு ஆகும். அதை எளிதாக்கும் வேலையை தற்போது சமூக வலைதளங்கள் செய்துவருகின்றன.

சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், பிற விளையாட்டு வீரர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் ஒரு பக்கத்தை தொடங்கி, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் என அனைத்திலும் அதிகாரப்பூர்வ பக்கங்களை வைத்திருப்பவர். மேலும் அதில் அவர்களை பல லட்சம் முதல் கோடிக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்தால் அவர்கள் காட்டில் மழை என்றே சொல்லலாம். ஆம் அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள், கூறும் கருத்துக்கள் என அனைத்தும் வைரலாகும், சமூக வலைதளத்தில் பேசுபொருளாகும். இதனை பயன்படுத்திக்கொள்ளும் கமர்ஷியல் நிறுவனங்கள், தங்களுடைய தயாரிப்பு பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக இந்த பிரபலங்களை நாடுவார்கள். அவர்கள் அந்த தாயாரிப்பு குறித்து ஏதேனும் கருத்து தெரிவித்து, புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவிடுவதற்கே பல கோடிகள் சம்பளமாக கொடுக்கப்படும்.

இது இந்தியா மட்டும் அல்ல, உலகளவில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்தப் பட்டியலில் ஹோலிவுட் பிரபலங்களும், சர்வதேச விளையாட்டு வீரர்களுமே முன்னிலையில் உள்ளனர். இதில் இன்ஸ்டகிராமில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் தற்போது இடம்பிடித்துள்ளவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் இன்ஸ்டகிராமில் மட்டும் ஒரு பதிவிற்கு ரூ. 5 கோடி சம்பளமாக பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்தப் பட்டியலில் 19வது இடத்தில் உள்ளார். இதற்கு முன்னதாக இதே பட்டியலில் 2019ம் ஆண்டு 19 வது இடத்தில் இருந்தவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. 2019ம் ஆண்டு இந்தப் பட்டியலில் விராட் கோலி 23வது இடத்தில் இருந்தார். பிரியங்கா சோப்ரா இந்தப் பட்டியலில் 2021ம் ஆண்டில் 27வது இடத்தில் இருக்கிறார், இவர் ஒரு பதிவிற்கு ரூ. 3 கோடி சம்பளமாக பெருகிறார்.

இன்ஸ்டகிராமில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஒரு பதிவிற்கு ரூ. 11 கோடி சம்பளமாக பெருகிறார். இதற்கு முன்னதாக ஹோலிவுட் நடிகரும், WWE என்ற மல்யுத்த போட்டியின் வீர்ருமான ராக் எனப்படும் ட்வைன் ஜான்சனே ஒரு பதிவிற்கு ரூ. 11 கோடி வருமானம் பெற்று முதல் இடத்தில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

Jeba Arul Robinson

பொய் கூறி எனது சினிமா வாழ்க்கையை சுபாஷ் சந்திரபோஸ் அழிக்க முயல்கிறார் -நடிகை பார்வதி நாயர்

EZHILARASAN D

ட்விட்டரில் உதவி கோரிய இளைஞர்; பதிலளித்த தமிழ்நாடு போலீஸ்

Dinesh A