“இது ஓய்வுக்கான நேரமில்லை” இணையத்தில் வைரலாகும் விராட் கோலி வீடியோ!

இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தயாராகும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் சர்வதேச…

இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தயாராகும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

2-1 என்ற கணக்கில் ஒரு நாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்தை வென்று தரவரிசையில் முதல் இடத்தை இந்தியா பிடித்தது. இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டி தொடங்க உள்ளது. முதலில் முப்பை இந்தியன் மற்றும் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் விராட் கோலி மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் கோலி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரூ அணி அதிக தொகை கொடுத்து வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது. அதில் கைல் ஜேமீசன் (15 கோடி), கிளென் க்ளென் மேக்ஸ்வெல் (14.25 கோடி), டேனியல் கிரிஸ்டன் (4.80 கோடி) என மிகவும் காஸ்லியான வீரர்கள் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.