நடிகைக்கு பாலியல் தொல்லை: சின்னத்திரை நடிகர் கைது

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிவி நடிகர் பிராச்சீன் சவுகான் (Pracheen Chauhan) கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல இந்தி சின்னத்திரை நடிகர் பிராச்சீன் சவுகான். ஏராளமான இந்தி சின்னத்திரைத் தொடர்களில் நடித்துள்ளார். இவர் மீது…

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிவி நடிகர் பிராச்சீன் சவுகான் (Pracheen Chauhan) கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல இந்தி சின்னத்திரை நடிகர் பிராச்சீன் சவுகான். ஏராளமான இந்தி சின்னத்திரைத் தொடர்களில் நடித்துள்ளார். இவர் மீது 22 வயது நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மும்பை போரிவிலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 30 ஆம் தேதி தனது வீட்டில் நடந்த பார்ட்டிக்கு 22 வயது நடிகையை அழைத்திருந்தார் சவுகான், மதுபோதையில் அவர் அந்த நடிகைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி விசாரித்த போரிவிலி போலீசார், சின்னத்திரை நடிகரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தி சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் சமீபத்தில் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் புகாரில் இந்தி நடிகர் பேர்ல் பூரி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.