இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என டிவிட்டரில் ஹேஸ்டேக் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி டிவிட்டரில் Arrestkohli என்ற ஹேஸ்டேக் ஒன்று வைரலாகி வருகிறது. திடீரென விராட் கோலியை ஏன் கைது செய்ய வேண்டும் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு காரணம் தமிழ்நாட்டில் நடந்த கொலைதான் என தகவல் வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் தர்மராஜ் இடையே கிரிக்கெட் தொடர்பாக பேச்சு எழுந்துள்ளது. பின்னர் அது சண்டையாக மாறியுள்ளது. விக்னேஷ் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரசிகர். தர்மராஜ் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி ரசிகர். மதுபோதையில் விக்னேஷ் தர்மராஜை கிண்டல் செய்ததோடு, விராட் கோலியையும் கிண்டல் செய்து தர்மராஜை சாடியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தர்மராஜ் நண்பன் என்றும் கூட பார்க்காமல் விக்னேஷை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், டிவிட்டரில் விராட் கோலி ரசிகரின் செயலை கண்டித்தும், ரோஹித் சர்மா ரசிகருக்கு நீதி கேட்டும் ArrestKohli என்ற ஹேஸ்டேக்கை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
-இரா.நம்பிராஜன்